மகாராணிக்காக கிறிஸ்துமஸ் செய்தியை பதிவு செய்த மன்னர் சார்லஸ்


செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் மன்னர் சார்லஸ் தனது தாயார் ராணி எலிசபெத்திற்காக கிறிஸ்துமஸ் செய்தியைப் பதிவுசெய்தார்.


கிறிஸ்துமஸ் தேவாலயம்

மறைந்த பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்த செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்கு சென்ற மன்னர் சார்லஸ், தனது தயார் முன் தலை வணங்கினார்.

மேலும், கிறிஸ்துமஸ் செய்தியைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் தினத்தன்று பிற்பகல் 3 மணிக்கு மன்னரின் முதல் கிறிஸ்துமஸ் உரை ஒளிபரப்பப்படும் என்று கூறப்படுகிறது.

மகாராணிக்காக கிறிஸ்துமஸ் செய்தியை பதிவு செய்த மன்னர் சார்லஸ் | King Charles Recording Christmas Message For Queen

கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒளிபரப்பாகும் செய்தியில், ராணி எலிசபெத் குறித்து மன்னர் சார்லஸ் நெகிழ்ச்சியுடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராணியின் நீண்ட ஆட்சிக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கத்தில், இது ஒரு நவீன தொடுகையை கொண்டு வந்துள்ளது.

தேவாலயத்தில் மன்னருக்கு பின்னணியில் ஒரு பெரிய கிறிஸ்துமஸ் மரம், நிலையான பொருட்களால் செய்யப்பட்ட ஆபரணங்கள் மற்றும் பைன் கூம்புகள் போன்ற இயற்கை பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மன்னர் குடும்பத்தின் மீது எதிர்பார்ப்பு

மன்னர் சார்லஸ் மற்றும் கமிலா நோர்போர்க்கில் உள்ள சாண்ட்ரிங்ஹாமில் பாரம்பரிய ராயல் கிறிஸ்துமஸிற்காக தங்கியிருக்கிறார்கள்.

இது கடந்த பல ஆண்டுகளில் முழுமையான வீட்டுடன் கூடிய மிகப்பெரிய கிறிஸ்த்துமஸ் ஆகும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சார்லஸ்/Charles

ஒரு கடினமான ஆண்டிற்கு பிறகு, ஒற்றுமையைக் காட்டுவதற்காக சாண்ட்ரிங்ஹாம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தினத்தில் காலை சேவைக்காக அனைவரும் மன்னர் மற்றும் அவரது மனைவியுடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

ராணி/Queen 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.