மெக்சிகோ: மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்களை தடுக்க, முன்னாள் அதிபர் டிரம்ப் ஆட்சி காலத்தில் எல்லையில் பிரம்மாண்ட தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. இதை ‘ட்ரம்ப் சுவர்’ என்றே அழைக்கின்றனர்.
குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் போரிசனா கிரா மத்தைச் சேர்ந்த பிரிஜ்குமார் யாதவ் (32), சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய மனைவி, கைக் குழுந்தையுடன் மெக்சிகோ வந்தார். அங்கு ட்ரம்ப் தடுப்புச் சுவரில் ஏறிய பிரிஜ்குமார் கீழே விழுந்து இறந்தார். அவது குழந்தை, மனைவி காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து விசாரணை நடக்கிறது.