புதிய க்ராஸ்ஒவர் கார்கள் 2017

2017 ஆம் ஆண்டில் இந்திய சந்தைக்கு வரவுள்ள கார்களின் வரிசையில் தொடக்கநிலை க்ராஸ்ஒவர் கார்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம். ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவி கார்களின் டிசைன் தாத்பரியங்களின் அடிப்படையிலே க்ராஸ்ஓவர் ரக மாடல்கள் வடிவமைக்கப்படுகின்றது.

பிரிமியம் ரக தயாரிப்பாளர்கள் முதல் அனைத்து தயாரிப்பாளர்களுமே க்ராஸ்ஓவர் ரக மாடல்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளதால் பல புதிய க்ராஸ்ஓவர்கள் இந்தியவிற்கு வரவுள்ளன.

1. மாருதி சுசூகி இக்னிஸ்

இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசூகி நிறுவனம் ஜனவரி 13ந் தேதி மாருதி இக்னிஸ் க்ராஸ்ஓவர் ரக மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக 80களில் பிறந்தவர்களை மையப்படுத்தியே இந்த கார் விற்பனை செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது.

  • வருகை – ஜனவரி 13 , 2017
  • விலை – ரூ.5.60 லட்சம் ஆரம்பம்
  • என்ஜின் – 1.2 லிட்டர் பெட்ரோல்  , 1.3 லிட்டர் டீசல்
  • கியர்பாக்ஸ்- 5வேக மேனுவல் , ஏஎம்டி கியர்பாக்ஸ்
  • போட்டியாளர்கள் – கேயூவி100 ,  பீட் ஏக்டிவ் , WR-V

2. செவர்லே பீட் ஏக்டிவ்

செவர்லே பீட் காரை அடிப்படையாக கொண்ட பீட் ஏக்டிவ் க்ராஸ்ஓவர் ரக மாடல் முதன்முறையாக டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வந்தது. இந்த காரில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , ஸ்மார்ட்போன் ஆதரவினை பெற்றதாக இருக்கும்.

  • வருகை – ஜனவரி – மார்ச் 2017
  • விலை – ரூ.5.60 லட்சம் ஆரம்பம்
  • என்ஜின் – 1.2 லிட்டர் பெட்ரோல்  , 1.0 லிட்டர் டீசல்
  • கியர்பாக்ஸ்- 5வேக மேனுவல் , ஆட்டோ கியர்பாக்ஸ்
  • போட்டியாளர்கள் –  இக்னிஸ் , அவென்ச்சூரா , அர்பன் க்ராஸ்

3. டட்சன் கோ க்ராஸ்

நிசான்  டட்சன் பிராண்டில் வரவுள்ள கோ க்ராஸ் மாடலானது பட்ஜெட் விலையில் அமைந்திருக்கம் வகையில் எதிர்பார்க்கப்படும் மாடல் கோ காரினை அடிப்படையாக கொண்ட தளத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

  • வருகை – ஜூலை 2017
  • விலை – ரூ. 6.50 லட்சம் ஆரம்பம்
  • என்ஜின் – 1.2 லிட்டர் பெட்ரோல்
  • கியர்பாக்ஸ்- 5 வேக மேனுவல் , ஏஎம்டி கியர்பாக்ஸ்
  • போட்டியாளர்கள் – கேயூவி100 ,  WR-V , இக்னிஸ்

4. ஹோண்டா WR-V

ஹோண்டா ஜாஸ் காரின் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள WR-V க்ராஸ்ஓவர் மாடல் பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடலை அடிப்படையாக கொண்ட இந்திய சந்தைக்கான மாடல் WR-V க்ராஸ்ஓவர் மாரச் மாதம் அறிமுகம் செய்யப்படலாம்.

  • வருகை – மார்ச் 2017
  • விலை – ரூ.8.00 லட்சம் ஆரம்பம்
  • என்ஜின் – 1.2 லிட்டர் பெட்ரோல்  , 1.5 லிட்டர் டீசல்
  • கியர்பாக்ஸ்- 5வேக மேனுவல் , சிவிடி கியர்பாக்ஸ்
  • போட்டியாளர்கள் – ஐ20 ஏக்டிவ் , அவென்ச்சூரா

5. மாருதி சுசூகி எஸ் க்ராஸ் பெட்ரோல்

மாருதி சுசூகி நெக்ஸா டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்படுகின்ற எஸ் க்ராஸ் காரில் பெட்ரோல் மற்றும் மேம்படுத்தப்பட்ட எஸ் க்ராஸ் மாடல் 2017 ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

  • வருகை – ஜூலை 2017
  • விலை – ரூ.8.70 லட்சம் ஆரம்பம்
  • என்ஜின் – 1.5 லிட்டர் பெட்ரோல்
  • கியர்பாக்ஸ்- 5வேக மேனுவல் , ஆட்டோ கியர்பாக்ஸ்

அடுத்தடுத்து வரவுள்ள க்ராஸ்ஓவர் கார்கள் பற்றி தெரிந்துகொண்டதை தொடர்ந்து புதிய கார்கள் பகுதியில் மேலும் பலவற்றை தெரிந்துகொள்ளலாம். காத்திருங்கள்…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.