புதுடெல்லி: அருணாச்சல் எல்லையில், கடந்த 9ம் தேதி தவாங் செக்டரில் அத்துமீற முயன்ற சீனாவின் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்நிலையில், அருணாச்சல், சிக்கிம் மாநிலங்களில் எல்லைக்கோட்டில் இருந்து 100 கிமீ சுற்றளவு பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராணுவ உயரதிகாரி ரானா பிரதாப் கூறுகையில்,‘‘ வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்ட பகுதியில் புதிய திட்டங்களுக்கு அனுமதி கிடைக்க தாமதம் ஏற்படுகிறது. இதனால், எல்லையில் இருந்து 100 கிமீ சுற்றளவு உள்ள பகுதிகளுக்கான திட்டங்களுக்கு,ஒற்றை சாளர முறை வசதி ஏற்படுத்தப்படும். இதற்காக அருணாச்சல், சிக்கிமில் 130 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இங்கு முக்கியமாக சாலைகள்,பாலங்கள் கட்டப்படும்’’ என்றார்.