புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவை சேர்ந்த கார்ப்பரேட் பவர் லிமிடெட் நிறுவனம் சுமார் 20 வங்கி கூட்டமைப்பில் ரூ.4037 கோடி பெற்று மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். நாக்பூர், மும்பை, ராஞ்சி, கொல்கத்தா, துர்காபூர், காசியாபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் 16 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.