நேபாள சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சீரியல் கொலையாளி சார்லஸ் சோப்ராஜ் பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டான்.
30க்கும் மேற்பட்ட கொலைகளை செய்ததாக கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 19 ஆண்டுகள் காட்மண்ட் சிறையில் கழித்த சோப்ராஜ் வயதுமூப்பு காரணமாக முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டான்.
சிறையில் இருந்து வெளிவந்த சோப்ராஜ், நீதிமன்ற உத்தரவுப்படி இரவோடு இரவாக பிரான்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.