கடப்பாரையால் அடித்து தம்பியை கொன்ற அண்ணன்.! போலீசார் விசாரணை.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடப்பாரையால் அடித்து தம்பியை கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் குடிக்காடு வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (50). இவரது தம்பி ரமேஷ் (45) ட்ராவல்ஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை இவர்கள் இரண்டு பேரும் தங்களுக்கு சொந்தமான வயலில் மிளகாய் சாகுபடி பணிகளை செய்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது மெதுவாக வேலை செய்வதாக கூறி அண்ணனை தம்பி திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அண்ணன் அருகில் இருந்த கடப்பாரையை எடுத்து தம்பி தலையில் தாக்கியுள்ளார். இதையடுத்து பலத்த காயமடைந்த ரமேஷை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ரமேஷின் மனைவி கார்த்திகா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாஸ்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.