பெங்களூர் நகரில் முதல் முறையாக நடைபெறும் தமிழ் புத்தக திருவிழா நாளை தொடங்கி ஜனவரி 1ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறவுள்ளது

பெங்களூர்: பெங்களூர் நகரில் முதல் முறையாக நடைபெறும் தமிழ் புத்தக திருவிழா நாளை தொடங்கி ஜனவரி 1ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறவுள்ளது. திமுக தலைமயிலான ஆட்சி அமைந்த பிறகு புத்தக கண்காட்சிகள் அதிக என்னிக்கையில் நடைபெற்றுவருகின்றன, இதன் தொடர்ச்சியாக கர்நாடக வாழ் தமிழக வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் விதமாக பெங்களூர் நகரில் முதல் முறையாக தமிழ் புத்தக கண்காட்சி நடத்தப்படவுள்ளது. இதனை நாளை மாலை 3 மணி அளவில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில் சுவாமி அண்ணாதுரை துவக்கிவைக்கவுள்ளார். இந்த கண்காட்சியானது அல்சுர் பகுதில் உள்ள தமிழ் சங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது.
 
கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் மற்றும் கர்நாடக தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கம் இணைந்து இந்த புத்தக கண்காட்சியை நடத்துகின்றனர். தொடக்க விழாவில் மக்களவை எம்.பி. மோகன், எம்.எல்.ஏ ரிஸ்வான் ஹர்ஷத், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆனந் குமார், தின சுடர் ஆசிரியர் அமுதன், புத்தக திருவிழா தலைவர் தனஜயன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். கண்காட்சியில் அணைத்து நூல்களுக்கும் 10% தள்ளுபடியும் வழங்க பட உள்ளது. மாணவர்களுக்கு 100 ரூபாய் மதிப்புள்ள புத்தக அன்பளிப்பு சீட்டும் வழங்க பட உள்ளது.          

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.