குறைந்தளவான மழை பெய்தாலும், மண்சரிவு தொடர்பாக எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ; ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.
மலைப்பாங்கான பிரதேசங்களில், புதிதாக கட்டடங்களை அமைக்கும் போது, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதி பெறப்பட வேண்டும். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வழங்கப்படும் முன்கூட்டிய எச்சரிக்கையை கருத்திற் கொள்வது அவசியமாகும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அனர்த்த ஒத்திகைகளில் பொதுமக்களின் பங்களிப்பு அவசியமாகும் அனர்த்தங்கள் தொடர்பாக அறிவிப்பதற்கு 117 என்ற அவசர எண்ணை தொடர்பு கொள்ள முடியும். அனர்த்தம் குறித்த அறிவிப்புகளை கவனத்திற் கொள்ளத் தவறினால், பாதிப்புக்கள் அதிகரிக்கலாம். கரையோரப் பிரதேசங்களில் நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதில் முறையான வழிமுறையைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி மேலும் தெரிவித்தார்.
தேசிய வானொலி