அமெரிக்காவில் வீசிய கடும் பனி புயலின் தாக்கத்தால் உடும்புகள், உறைந்து தரையில் அசையாமல் கிடக்கின்றன.
புளோரிடா தெருக்களில் உள்ள மரங்களில் வாழ்ந்த உடும்புகள் தரையில் விழுந்து கிடக்கின்றன. கை, கால்களை அவற்றால் அசைக்க முடியவில்லை. பனிப்புயலின் தாக்கமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. விரைவில் பனிபுயலின் தாக்கம் குறைந்ததும், உடும்புகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடும் என கூறப்படுகிறது.