திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லறை மேடு அருகே தனியாருக்கு சொந்தமான வணிகவளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் வளாகத்தில் முதல்தளத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடமும், அதற்கு மேல் முற்றிலும் குளிரூட்டப்பட்ட அழகுநிலையமும் செயல்பட்டு வருகிறது.
இந்த அழகுநிலையத்தை உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்குமார் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு ஒரு வரவேற்பரை மற்றும் ஐந்து அறைகள் உள்ளன. இதில், சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த அழகுநிலையதிற்கு வழக்கம்போல் பணிக்கு வந்த ஊழியர் மின்இணைப்பை போட்டபோது முதல் அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைப்பார்ஜேக்க சென்றபோது சிறிதுநேரத்தில் அரை முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே அவர் இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
ஆனால், அவர்கள் வருவதற்குள் அழகுநிலையம் முழுவதும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. பின்னர் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். இருபினும் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானதாக தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.