டெல்லி : உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி-நெட் தேர்வுக்கு ஜனவரி 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2023 பிப்ரவரி 21-ம் தேதி முதல் மார்ச் 10-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும், கணினி அடிப்படையில் 83 பாடங்களில் உதவி பேராசிரியர் தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
யூ.ஜி.சி. நெட் தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 21-ந் தேதி முதல் மார்ச் 10-ந் தேதி வரை நடைபெறும் என பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் அறிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியக்குழுவின் யுஜிசி-நெட் தேர்வு என்பது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலம் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். அந்த வகையில் 2023-ம் ஆண்டிற்கான யுஜிசி-நெட் தேர்வு வருகின்ற பிப்ரவரி 21-ந் தேதி முதல் மார்ச் 10-ந் தேதி வரை நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் மமிடலா ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஜூனியர் ரிசர்ச் பெலோஷிப் மற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கான யுஜிசி-நெட் தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 21-ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும். இந்த தேர்வுக்கு டிசம்பர் 29 தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 17-ந் தேதி மாலை 05:00 மணி வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு ugcnet.nta.nic.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.