வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கயா: தலாய்லாமாவை வேவு பார்த்ததாக சீன பெண் உளவாளியை பீஹார் போலீசார் இன்று கைது செய்தனர்.
திபெத் புத்தமதத்தலைவர் தலாய்லாமா, 1959-ம் ஆண்டு திபெத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டதால், அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். ஹிமாச்சல் பிரதேசம் தர்மசாலாவில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் பீஹாரில் புத்தகயா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தலாய்லாமா வந்திருந்தார். அப்போது பெண் ஒருவரை கயா போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் சீன நாட்டு உளவாளி என்பதும், தலாய்லாமாவை வேவு பார்க்க இந்தியா வந்திருப்பதாகவும் தெரியவந்தது. அவரது புகைபடத்தை வெளியிட்ட போலீசார் அவரை நாடு கடத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement