கோயில் விழாவில் மிரண்டு ஓடிய யானை: பக்தர்கள் அலறல்

பாலக்காடு: பாலக்காடு அருகே கோயில் விழாவில் மிரண்டோடிய யானை தூக்கி வீசியதில் 6 டூவீலர்கள் சேதமடைந்தன. கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வடக்கஞ்சேரி கிழக்கஞ்சேரியில் திருவரை அம்மன் கோயில் நிறைமாலை திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவில் அலங்கரிப்பட்ட மூன்று யானைகள் மீது அம்மன் வீதியுலா வந்தது. கோயிலின் அருகே வந்தபோது புத்தூர் தேவிநந்தன் என்ற யானை திடீரென மிரண்டோடியது. தொடர்ந்து வீதியுலா வந்த மற்றொரு யானையையும் தேவிநந்தன் முட்டி காயப்படுத்தியது.
மேலும், கோயில் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 6 டூவீலர்களை தூக்கிவீசி சேதப்படுத்தியது. யானை மிரண்டோடியதால் பக்தர்கள் அலறியடித்து தப்பியோடி உயிர்பிழைத்தனர்.

தேவிநந்தன் யானை மீது அமர்ந்திருந்த ஆலத்தூர் காட்டுச்சேரியைச் சேர்ந்த கிரீஷ்(35) கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை போலீசார் மீட்டு வடக்கஞ்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். கோயில் வளாகத்தில் அமைந்துள்ள நாகராஜர் கோயில் மேற்கூரையையும் யானை சேதப்படுத்தியது. 4 மணிநேர போராட்டத்திற்கு பின் மிரண்டோடிய யானையின் பாகன்களான வாசு, பிரசாத் மற்றும் மற்ற யானை பாகன்களும் ஒருங்கிணைந்து யானையை சங்கிலியால் பிணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.