சீனாவுடனான பதற்றத்திற்கு இடையே, தைவானிற்கு, சுமார் 14 ஆயிரத்து 895 கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஆயுத விற்பனை, தைவானின் பாதுகாப்பை மேம்படுத்த உதவுவதுடன், பிராந்தியத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை, இராணுவ சமநிலை மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை பேண உதவும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பரில், தைவானுக்கு சுமார் ஒரு பில்லியன் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் தெரிவித்த நிலையில், தற்போது மீண்டும் டாங்கி எதிர்ப்பு அமைப்புகள், ஆயுதங்கள் விற்பனைக்கு பைடன் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.