சென்னை: பூமியின் மேற்பரப்பில் சுமார் 400 கிலோ மீட்டருக்கு அப்பால் விண்வெளியில் பறந்து கொண்டுள்ளது சர்வதேச விண்வெளி நிலையம். இந்த ஆய்வு நிலையம் அண்மையில் இந்தியாவை கடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை நாசா பகிர்ந்துள்ளது.
இந்த வீடியோ பாகிஸ்தானுக்கு அருகே இந்தியாவின் வடமேற்கு கடலோரத்திலிருந்து தென்கிழக்கு கடலோர பகுதியை கடந்து செல்கிறது. அதாவது குஜராத்தில் துவங்கி தமிழகம் வரையில். கடந்த 22-ம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1:48 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையம் இந்தியாவுக்கு மேல் பறந்துள்ளது.
வழக்கத்திற்கு மாறாக தெளிவான வானம் இருந்ததாக நாசா இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளது. அதனால் இந்தியாவின் நிலப்பரப்பு காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 5.22 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது இந்த வீடியோ. மும்பை, புனே, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்கள் இந்த வீடியோவில் உள்ளன.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள். கடந்த ஜனவரி மாதம் தீவு நாடான டோங்கோவில் கடலில் எரிமலை வெடித்த காரணத்தால் சுனாமி பாதிப்பு ஏற்பட்டது அந்த நிகழ்வை விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ மூலம் பகிர்ந்திருந்தது நாசா.
Unusually clear skies on this pass over India today. Starting at the NW coast close to the border with Pakistan heading towards the SE passing over Mumbai and Bangaluru (plus so many other cities).
Dec 22, 2022 08:18 AM UTC. pic.twitter.com/0an96CsmeX— ISS Above (@ISSAboveYou) December 22, 2022
The first half (approx) of the pass. With a little more detail showing the cities. pic.twitter.com/sGDHerhROo
— ISS Above (@ISSAboveYou) December 22, 2022