மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து 8வது நாளாக இன்றும் 6,500 கனஅடியாக நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கு கடந்த 6 நாட்களாக 5,600 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 5,400 கனஅடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின்நிலையங்கள் வழியாக விநாடிக்கு 5000 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும், நீர்மட்டம் 120 அடியாகவும் உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.