கீவ்,
உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தத் தொடங்கின. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில், இருதரப்பிலும் பெரிய அளவிலான உயிரசேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் உக்ரைனின் உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
உக்ரைனில் உள்ள கெர்சன் உள்ளிட்ட பகுதிகளின் மீது மீது ரஷிய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஏவுகணைகள், கையெறி குண்டுகள் போன்ற ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ரஷிய ராணுவம் இன்று காலை மொத்தம் 69 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 54 ஏவுகணைகளை உக்ரைன் ராணுவத்தின் வான் பாதுகாப்பு படைப்பிரிவு வீரர்கள் சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைனின் தலைமை தளபதி வலேரி சலோஸ்னி தெரிவித்துள்ளார்.