புழல்: கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்த நாகராஜ் (32) என்பவருக்கு, போக்சோ வழக்கில் நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் நேற்று முன்தினம் இரவு சொறி, சிரங்கு சிகிச்சைக்காக வைத்திருந்த மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாார்.அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.