நகர அபிவிருத்தி அதிகார சபையின் நடுத்தர வருமான வீடுகள் டொலருக்கு விற்கப்படும் திட்டத்தின் கீழ் 500,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஈட்டியுள்ள தொகை 502,170.93 டொலர்கள். இது உள்ளூர் நாணயத்தில் 181.2 மில்லியன் ரூபாய். இந்த ஆண்டு டொலர்களில் வீடுகள் விற்கப்பட்டு எதிர்பார்க்கப்படும் வருமானம் 05 இலட்சம் டொலர்கள். ஆண்டு முடிவதற்குள் அந்த இலக்கை தாண்ட முடிந்ததாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்நாட்டின் டொலர் நெருக்கடிக்கு தீர்வாக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட நடுத்தர வருமான வீடுகளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு இலங்கை தொழிலாளர்கள் கொள்வனவு செய்வதற்கு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, முதலாவது வீடு வீடு கடந்த செப்டம்பர் மாதம் விற்கப்பட்டது. துபாயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரால் கொள்வனவு செய்யப்பட்டது.
தற்போது 11 வீடுகள் டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த வீடுகள் பன்னிபிட்டிய, வீரமாவத்தையில் வியத்புர வீடமைப்புத் தொகுதியில் அமைந்துள்ளது. தற்போது இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 2 படுக்கையறைகள் கொண்ட வீடுகள் முற்றாக விற்றுவிட்டதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது .
துபாய், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஓமான் கத்தார் மற்றும் பிஜி தீவுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இந்த வீடுகளை வாங்கியுள்ளனர். வீடுகளுக்குரிய பணத்தை மொத்தமாக செலுத்துவதால் 10 சதவீதம் விலைக்கழிவும் கிடைக்கும்.
மேலும் 8 வீடுகளை வாங்க வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் கோரிக்கை விடுத்திருப்பதாக அந்த அதிகாரசபை கூறுகிறது. நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகள் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு விற்பனையில் இருந்து அடுத்த வருடம் அமெரிக்க டொலர்கள் 1.5 மில்லியன் வருமானத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபை ஏற்கனவே 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்ட திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன என்று நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு இந்த வீடுகளை கொள்வனவு செய்ய முடியுமாக இலங்கை மத்திய வங்கியின் முன்மொழிவுக்கு ஏற்ப திறக்கப்படுகின்ற விஷேட கணக்கு ஒன்றாகிய உள்நோக்கிய முதலீட்டு கணக்குகளை (INWARD INVESTMENT ACCOUNT) திறப்பதன் ஊடாக செயற்படுத்தலாம்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.uda.gov.lk ஐப் பார்வையிடுவதன் மூலம் மேலதிக தகவல்கள் மற்றும் தேவையான விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் 077-7794016 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.