பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சின்ஜோரோ நகரில் இந்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தயா பீல் (Daya Bheel) எனும் 40 வயது இந்து பெண் தலை துண்டிக்கப்பட்டு, தோல் குறிக்கப்பட்டு, மார்பகம் துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக, விதவை பெண்ணான அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் மிகவும் மோசமான நிலையில் சிதைக்கப்பட்டு உள்ளது. அவரது தலை உடலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது. தலை முழுவதும் உள்ள சதையை காட்டுமிராண்டிகள் அகற்றியுள்ளனர்.
பெண்ணின் சிதைக்கப்பட்ட உடல் நேற்று வயலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Daya Bhel 40 years widow brutally murdered and body was found in very bad condition. Her head was separated from the body and the savages had removed flesh of the whole head. Visited her village Police teams from Sinjhoro and Shahpurchakar also reached. pic.twitter.com/15bIb1NXhl
— Krishna Kumari (@KeshooBai) December 29, 2022
அந்தப் பெண்ணின் குடும்பத்தினரிடமிருந்து பொலிஸார் விவரங்களை சேகரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மேலும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
கொலை செய்யப்பட தயா பீலுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்து பெண் கொடூரமாக கொல்லப்பட்டதையடுத்து அங்கு பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் தனது சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
OPIndia