பாஜக மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன், காய்ச்சல் மற்றும் வயிற்று உபாதை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு நிர்மலா சீதாராமன் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சையின் பலனாக அவர் குணமடைந்ததால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வீடு திரும்பினார்.