அமெரிக்காவில் பனிப்புயல் தாக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்புயலின் கோர தாண்டவம்
50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பேரழிவு பனிப்புயல் அமெரிக்காவில் உயிர் பலி வாங்கி வருகிறது.
குறிப்பாக, Buffalo பகுதியில் பலர் பனியில் சிக்கிய உயிரிழந்துள்ளனர்.
கேசி மெக்கரோன் என்பவரது 52 வயது தாய் மோனிக் அலெக்ஸாண்டர், ‘கிறிஸ்துமஸ் ஈவ் அன்று திரும்ப வருவேன்’ எனக் கூறி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
ஆனால் சில மணிநேரங்களுக்கு பிறகு தாயிடம் இருந்து எந்த தகவலும் வராததால், கேசி மிகுந்த அச்சத்திற்கு உள்ளானார்.
@Derek Gee/The Buffalo News via AP
சடலமாக மீட்கப்பட்ட பெண்
இந்த நிலையில் அவரது வீட்டிலிருந்து சில அடி தூர தொலைவில் மோனிக் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
காரில் வெளியே சென்ற அவர் பனியில் சிக்கிக் கொண்டதால் உயிரிழந்ததாக பின்னர் தெரிய வந்தது.
தேசிய காவல்படை உறுப்பினர்கள் மோனிக்கின் உடலை மீட்டனர். தங்கள் குடும்பத்தின் பெரிய் தூணாக இருந்த தனது தாயை இழந்துவிட்டதாக கேசி வேதனையுடன் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், ‘என் குழந்தைகள் அவர்களின் பாட்டியை இழந்தார்கள். அத்துடன் ஒரு பாட்டியாக அவர்களின் வாழ்வில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இப்போது அவர்களுக்கு நினைவுகள் மட்டுமே மிஞ்சியுள்ளன’ என தெரிவித்தார்.
மோனிக் அலெக்ஸாண்டரின் மரணத்தின் மூலம் வடக்கு நியூயார்க் கவுண்டியில் பலியானோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் Buffalo-வில் இறந்தவர்கள் மட்டும் 31 பேர் ஆவர்.
@Jeffrey T. Barnes/AP