சந்தேக நபர்களை தடுத்துவைத்து விசாரணை செய்ய அக்கரைப்பற்று பதில் நீதவான் உத்தரவு

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற கட்டிட தொகுதி தொகுதியில் இடம்பெற்ற தீ சம்பவம் தொடர்பில்,கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூன்று பேரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 04ம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் கே. சமீம் (29) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை (21) நீதிமன்ற கட்டடத் தொகுதி தீப்பற்றியது. தீயினால் நீதிமன்றின் வழக்கு பதிவேட்டு அறை மற்றும் திறந்த நீதிமன்றம் போன்ற பல பிரிவுகளிலுள்ள ஆவண கோப்புகள் முற்றாக எரிந்துள்ளது.

விசேட பொலிஸ் குழு விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தை சேர்ந்த 18,19 மற்றும் 24 வயதுடைய 03 சந்தேக நபர்கள் புதன்கிழமை (28) கல்முனை பெரியநீலாவனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.