பிரித்தானியாவில் Strep A பாதிப்புக்கு மேலும் நான்கு சிறார்கள் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
எண்ணிக்கை 30 என உறுதி
இதனால், பிரித்தானியாவில் Strep A பாதிப்புக்கு பலியாகியுள்ள 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் எண்ணிக்கை 30 என உறுதியாகியுள்ளது.
மேலும், ஸ்கொட்லாந்தில் 10 வயதுக்கு உட்பட்ட இரு சிறார்கள் அக்டோபர் 3ம் திகதிக்கு பின்னர் Strep A பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
@swns
பெல்ஃபாஸ்ட் மற்றும் வேல்ஸ் பகுதியில் மூன்று சிறார்கள் மரணமடைந்துள்ளதை UKHSA அமைப்பு பதிவு செய்துள்ளது.
மேலும், 4 வயதுக்கு உட்பட்ட 151 சிறார்கள் Strep A பாதிப்புக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
122 பேர் மரணம்
2017 மற்றும் 2018 காலகட்டத்தில் 5 மற்றும் 9 வயதுடைய சிறார்கள் 102 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர்.
மட்டுமின்றி, மொத்தமாக சிறார்கள் உட்பட 122 பேர் அப்போது மரணமடைந்துள்ளனர் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
@pa
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை ஸ்கார்லெட் காய்ச்சலுக்கு 33,836 பேர்கள் இலக்கானதாக கூறப்படுகிறது. ஆனால் 2017 மற்றும் 2018ல் 4,672 பேர்கள் மட்டுமே ஸ்கார்லெட் காய்ச்சலுக்கு இலக்காகியுள்ளனர்.