கம்பத்தில் வனத்துறையினருக்கு தீ தடுப்பு பயிற்சி

கம்பம்: வனத்துறையினருக்கு பேரிடர் மீட்பு மற்றும் தீ தடுப்பு குறித்த பயிற்சி கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. தேனி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயத்திற்குட்பட்ட வன ஊழியர்களுக்கு பேரிடர் மீட்பு மற்றும் தீ தடுப்பு குறித்து பயிற்சி கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கம்பம் கிழக்கு வனச்சரகர் பிச்சைமணி தலைமை தாங்கினார். தேனி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவி அலுவலர் குமரேசன் முன்னிலை வகித்து வன ஊழியர்களுக்கு தீ தடுப்பு குறித்து பயிற்சியினை வழங்கினார்.

இதில் நீர்நிலைகள், அடர்ந்த காடுகளில் ஏற்படும் தீ விபத்து, பேரிடர் காலங்களில் தீயணைப்புத் துறையினர் பயன்படுத்தும் உபகரணங்கள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும் வனப்பகுதியில் விபத்தில் சிக்கிய பொதுமக்களை எவ்வாறு மீட்பது என தீயணைப்புத்தறையினர் தத்ரூபமாக செய்து காட்டினர். காலை 11 மணி தொடங்கிய நிகழ்ச்சியானது மதியம் 2 மணிவரை நடைபெற்றது. இதில் கம்பம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ராஜலட்சுமி, ஓய்வுபெற்ற தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஆறுமுகம் மற்றும் கம்பம், சின்னமனூர், வருசநாடு, கூடலூரில் இருந்து வனவர்கள், வனசரகர்கள், தீ தடுப்பு காவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.