2022 இல் உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த அகிலத்தை அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்திய முக்கிய நிகழ்வுகள், சம்வங்களின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு.
வெப்ப அலையில் சுருண்ட ஐரோப்பா பிரிட்டன் உள்ளிட்ட பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் ஆண்டின் பெரும்பாலான மாதங்கள் குளிர் காலமாகவே இருப்பது வழக்கம். இந்த வழக்கத்துக்கு மாறாக, 2022 ஆண்டில் ஐரோப்பிய நாடுகளை வெப்பம் வாட்டி வதைத்தது. பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, போலந்து உள்ளிட்ட நாடுகலில் எழுந்த வெப்ப அலை பொதுமக்களை வாட்டி வதைத்தது. அதிகபட்சம் 20 -25 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை மட்டுமே அனுபவித்து வந்த ஐரோப்பியர்களால் திடீரென 38 -50 டிகிரி அளவுக்கு உயர்ந்த வெப்பத்தை தாக்கு பிடிக்க முடியவில்லை. இதன் விளைவாக அங்கு வற்ட்சியும் ஏற்பட்டது. 2022 இல் ஐரோப்பிய நாடுகளில் நிலவிய வரலாறு காணாத வெப்பஅலை மற்றும் வறட்சியின் விளைவாக மொத்தம் 20 ஆயிரம் பேர் வரை பலியாகினர். பருவநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதலின் விளைவாக ஐரோப்பிய நாடுகள் இந்த பாதிப்பை சந்தித்து நேரிட்டுள்ளதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானை புரட்டிப் போட்ட வெள்ளம்2022 இல் பாகிஸ்தானில் வழக்கத்தைவிட அதிக மழை பெய்தது. சிந்து மாகாணத்தில் வழக்கத்தைவிட 784% அதிக மழையும், பலூசிஸ்தானில் இயல்பைவிட 500% அதிக மழையும் கொட்டித் தீர்த்தது. [இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சி்க்கி சுமார் 350 குழந்தைகள் உட்படக் குறைந்தது 1, 200 பேர் உயிரிழந்துள்ளனர்.2017ஆம் ஆண்டு தெற்காசியாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு இது உலகின் மிக மோசமான வெள்ளப் பெருக்காக கருதப்பட்டது. ஆகஸ்ட் 25 ஆம் தேதி, பாகிஸ்தான் அரசு வெள்ளம் காரணமாக அவசர நிலையை அறிவித்தது.பாகிஸ்தானில் ஏற்பட்ட கனமழை, வெள்ளப் பெருக்கின் விளைவாக சுமார் 2.18 லட்சம் வீடுகள் முற்றிலும் சேதமடைந்தாகவும், 4.58 லட்சம் வீடுகள் பகுதியளவு சேதமடைந்ததாகவும், 20 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டதாகவும், 7.94 லட்சம் கால்நடைகள் உயிரிழந்ததாகவும் ஐக்கிய நாடுகள் சபை மனிதநேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலக புள்ளிவிவரம் வெளியிட்டிருந்தது.
அமெரிக்காவில் ஓயாமல் ஒலித்த துப்பாக்கி சப்தம்தற்காப்புக்காக தனிநபர்கள் அமெரிக்காவில் துப்பாக்கிகளை வைத்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இதன் எதிர்விளைவாக அங்கு பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் என பொத இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவது தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது. 2022 இல் இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் துப்பாக்கி சப்தம் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தது.நியூயார்க், டெக்சாஸ், கலிஃபோர்னியா என பல்வேறு மாகாணங்களில் 2002 இல் நிகழ்ந்த 700க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 850க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அமெரிக்காவில் அதிகரிக்கும் வரும் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வலுத்ததையடுத்து, தனிநபர்கள் துப்பாக்கி வைத்திருப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வகைசெய்யும் சட்டம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.
மனிதனுக்கு பொருத்தப்பட்ட பன்றியின் இதயம்மருத்துவ அறிவியலில் மற்றொரு மைல்கல்லாக மனிதனுக்கு பன்றி இதயம் பொருத்தப்பட்ட அதிசயம் சம்பவம் 2022 ஜூன் மாதம் நிகழ்ந்தது.அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தின் யூனிவர் சிட்டி ஆஃப் மேரி லேண்ட் என்ற பகுதியில் 57 வயதான பென்னட் என்பவர் இதய நோய் சிகச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. ஆனால் விரைவில் முன்னுரிமை அடிப்படையில் இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக இதயம் கிடைப்பது நடக்காத காரியம் அதனால் அவருக்கான தீர்வு குறித்து டாக்டர்கள் யோசித்தபோதுதான் பன்றியின் இதயத்தை பொருத்தும் ஐடியா அவர்களுக்கு உதித்தது. உடனே பென்னட்டின் அனுமதியுடன் டாக்டர்கள் அவருக்கு பன்றிியின் இதயத்தை பொருத்தினர். சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற அபாயகரமான அறுவை சிகிச்சைக்கு பிறகு, நலமாக இருந்துவந்க அவர் யாரும் எதிர்பாராதவிதமாக இரண்டு மாதங்களுக்கு பின் திடீரென இறந்தார்.
பூமிியை காத்த டார்ட் விண்கலம்விண்வெளியில் தற்போது கிட்டத்தட்ட 10,000 விண்கோள்கள் சுற்றிக் கொண்டுள்ளன. இவற்றில் ஒன்றுதான் டிமார்பஸ் இந்த விண்கோள் பூமியை தாக்கும் அபாயம் இருப்பதாக அமெரி்க்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கணித்தது. இந்த விண்கோளின் தாக்குதலில் இருந்து பூமியை காப்பாற்றியே ஆக வேண்டும் என்று நாசா திட்டமிட்டது.இதன்படி, டிமார்பஸ் விண்கோளிலிருந்து 525 அடி தள்ளிப் போய் அதனை சுற்றும் வகையில் அதை திசை திருப்பி விட நாசா திட்டமிட்டது. 330 மில்லியன் டாலர் செலவில் இந்த திட்டத்தை நாசா செயல்படுத்துகிறது. டார்ட் விண்கலமானது மணிக்கு 15,000 மைல்கள் என்ற வேகத்தில் செல்லக் கூடியது. 1344 பவுன்டு எடையுடன் கூடிய இந்த விண்கலமானது, 59 அடி சுற்றளவைக் கொண்டது. நேராக போய் டிமார்பஸ் மீது மோதக் கூடிய வகையில் இதனை செலுத்தி, டிமார்பஸ் விண்கலத்தை பூமியை நோக்கி வராதபடி திசைத் திருப்பியது நாசா. 2022 அக்டோபரி்ல் இந்த அதிசய அறிவியல் நிகழ்வு நிகழ்ந்தது. விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு மைல்கல்லாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.