ரிஷப் பண்ட் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் – விராட் கோலி டுவீட்

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட், இன்று காலை டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார். டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதியது.

இந்த விபத்தில் ரிஷப்பண்ட் படுகாயம் அடைந்தார். அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது.தற்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் .அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

விரைவில் குணமடைய வேண்டும் ரிஷப் பண்ட் . நீங்கள் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். என தெரிவித்துள்ளார்.மேலும் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இந்நாள் வீரர்களும் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்து ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.