மோடியின் தாயார் மறைவிற்கு ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்..!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானதையடுத்து, ஜப்பான், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள், இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, பிரதமர் மோடியின் அன்புத்தாயின் மறைவுக்கு, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தாயை இழப்பதை காட்டிலும் மிகப்பெரிய இழப்பு ஒன்று இல்லை என குறிப்பிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப், பிரதமர் மோடிக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

அதேபோல், நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹல், பிரதமர் மோடியின் அன்புத்தாயின் மறைவை கேட்டு தான் வருத்தமடைவதாகவும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.