தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை தளர்த்த கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் நேற்று பள்ளிக்கல்வித்துறை தலைமைச் செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என இடைநிலை ஆசிரியர்களின் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தொடர்ந்து 4வது நாளாக இன்று நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இன்று நடைபெற்ற போராட்டத்தில் 73 பேர் மயக்கம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.