"ஆப்கானிஸ்தானுக்கு வழங்கும் உதவிகளை நிறுத்தப்போவதில்லை" – ஐ.நா. திட்டவட்டம்

காபுல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு வருவதாக சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனிடையே சமீபத்தில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கவும், தனியார் தொண்டு நிறுவனங்களில் சேர்ந்து பணிபுரியவும் தலீபான் அரசு தடை விதித்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து ஜி7 கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்ட நிலையில், தனியார் தொண்டு நிறுவனங்களில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு வழங்கி வரும் உதவிகளை நிறுத்தப் போவதில்லை என ஐ.நா. திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

பெண்களின் பங்களிப்பு இல்லாமல் விரிவான மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்வது சாத்தியமில்லை எனவும், இருப்பினும் பட்டினியால் வாடுபவர்கள், உயிருக்கு ஆபத்தான சூழலில் உள்ளவர்களுக்கு உதவி புரிய நிபந்தனை விதிக்க முடியாது எனவும் ஐ.நா. கூறியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.