மலசலகூடத்துக்காக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து 7 வயது சிறுவன் மரணம்


அம்பாறை – ஆலையடிவேம்பில் மலசலகூடத்துக்காக வெட்டப்பட்ட குழியில்
வீழ்ந்து 7 வயது சிறுவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கண்ணகி கிராமத்தில் நேற்று (29.12.2022) இந்தச்
சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ரவிக்குமார் லதீஸ் எனும் சிறுவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மலசலகூடத்துக்காக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து 7 வயது சிறுவன் மரணம் | 7 Year Old Boy Died Falling Cut For Defecation

குடிதண்ணீர் தட்டுப்பாடு

குடிதண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் குறித்த பகுதியில் மலசலகூடத்துக்காக
வெட்டப்பட்ட குழியில் நிரம்பும் நீரை அவ்வப்போது சில தேவைகளுக்காகச் சிறுவனின்
குடும்பம் பயன்படுத்தியுள்ளது.

இதனை அவதானித்துள்ள அந்தச் சிறுவனும் அந்தக்
குழியில் யாரும் அவதானிக்காத நேரத்தில் நீரை அள்ள முயற்சித்துள்ளார்.

மலசலகூடத்துக்காக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து 7 வயது சிறுவன் மரணம் | 7 Year Old Boy Died Falling Cut For Defecation

மேலதிக விசாரணைகள்

இதன்போது
குறித்த சிறுவன் குழியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மரணமடைந்த சிறுவனின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில்
உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்றுப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.