பிரதமர் மோடிக்கு மனதளவில் நம்பிக்கை அளித்தவர் அவரது தாயார் ஹீராபென். அவரது வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் அவரை
சந்தித்து ஆசி பெற்றார்.
ஹீராபென் கடந்து வந்த பாதை…
* 1923 ஜூன் 18 : குஜராத்தின் மேஹ்சனா மாவட்டத்தில் விஸ்நகரில் பிறந்தார். குழந்தை பருவத்திலேயே பெற்றோரை இழந்ததால் பள்ளி படிப்பு பாதியில் ரத்து.
* வாத் நகரில் டீக்கடை நடத்திய தாமோதர் தாஸ் மூல்சந்த்தை திருமணம் செய்தார்.
* ஐந்து மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
* ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் பணியாற்ற மோடி சென்ற போது, ‘மனதிற்கு பிடித்ததை செய்’ என வாழ்த்தினார்.
* 1989: கணவர் தாமோதர் தாஸ் மறைந்தார்.
* 2001: குஜராத் முதல்வராக பதவியேற்ற மோடியிடம், ‘ஒருபோதும் லஞ்சம் வாங்காதே’ என அறிவுறுத்தினார்.
* 2002: இரண்டாவது முறை குஜராத் முதல்வராக மோடி பதவியேற்ற விழாவில் பங்கேற்றார்.
* 2004: ‘தன் மகன் ஒருநாள் இந்தியாவின் பிரதமராவார்’ என ஹீராபென் தெரிவித்ததாக, மோடி குடும்ப நண்பர் கிஷோர் மேஹ்வானா கூறினார். அப்போது குஜராத் முதல்வராக மோடி இருந்தார்.
* 2007: தன் வீடு, சுற்றுப்புறம் சுத்தமாக இருக்க விரும்புவார். இதில் கற்ற பாடத்தில் இருந்து ‘துாய்மை இந்தியா’ திட்டத்தை மோடி துவக்கினார்.
* 2016: எளிமையானவர். காந்திநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
* 2022 டிச. 30: உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
தாயார் ஹீராபென் 99வது வயதை கடந்து ஜூன் 18ல் பூர்த்தி செய்த போது, பிரதமர் மோடியின் உருக்கமான பதிவுகளில் சில…குழந்தை போல…தாயாரை பார்க்க வீட்டிற்கு செல்லும் போது, அவர் தன் கையால் தயாரித்த உணவை எனக்கு ஊட்டிவிடுவார். சாப்பிட்டு முடித்ததும் கைக்குட்டையால் எனது முகத்தை ஒரு குழந்தையை போல துடைப்பார். வாயில்லா ஜீவன்கள் மீது, தாயாருக்கு பாசம் அதிகம். தெரு நாய்களுக்கு உணவு அளிப்பார்.கோடை காலத்தில் பறவைகளின் தாகம் தீர்க்க பாத்திரத்தில் தண்ணீர் வைப்பார். கொரோனா ஒழிப்புக்காக
விளக்கேற்றினார்.
கடவுள் அருள்
குஜராத் முதல்வராக இருந்தபோது, ஆசிரியர்களை கவுரவிக்க எண்ணினேன். எனது குருவான தாயாரை அழைத்தேன். அதற்கு, ‘உன் தாயாக இருக்கலாம். மற்றபடி உனது வளர்ச்சி கடவுள் அருளால் மட்டுமே நடந்தது,’ எனக்கூறி அழைப்பை நிராகரித்தார்.
2016 நவ.16
தங்கம் இல்லை
எனது தாயார் பெயரில் சொத்து இல்லை. சிறிய அளவிலான தங்கம் கூட அணிந்தது கிடையாது. சிறு அறையில்தான் வாழ்ந்தார். எளிமையான வாழ்க்கையை இவரிடம் கற்றுக்கொண்டேன். எனது தாயார் ஓட்டளிக்க தவறியது இல்லை. பஞ்சாயத்து முதல் பார்லிமென்ட் தேர்தல் வரை அனைத்திலும் ஓட்டளிப்பார். எனக்கு குளிர் காலத்தில் மண்பானை நீரில் குளிக்கும் வழக்கம் இருந்தது. சில வாரங்களுக்கு தானிய உணவு எடுத்துக்கொள்ளாமல், பால் மட்டும் பருகுவேன். இதற்கு தாயார் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார். எனது விருப்பப்படி செயல்பட அனுமதித்தார்.
ஜனநாயக கடமையை நிறைவேற்றிய தருணத்தில்….
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்