1,000 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சி பறிமுதல்

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நடராஜபுரத்தை சேர்ந்த சாகுல் ஹமீது, நகைக்கடை பஜாரில் மட்டன் கடை வைத்துள்ளார். புகாரின்படி, தேவகோட்டை உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று காலை சாகுல் ஹமீதின் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் பின்பக்கம் இரண்டு ப்ரிட்ஜ்களில் ஒரு வாரத்திற்கு முன்பு வெட்டப்பட்ட ஆட்டு இறைச்சியை விற்பனைக்காக பதப்படுத்தி வைத்திருந்தது தெரிய வந்தது. நகராட்சி மற்றும் காவல் துறையினர் வந்து ப்ரிட்ஜில் இருந்த சுமார் 1,000 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்தனர். சாகுல் ஹமீது மீது வழக்கு பதிந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.