பிரித்தானியாவில் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்கும் ஆயிரக்கணக்கான நடுத்தர வயது மக்கள் தற்போது தடுக்கக்கூடிய நிலைமைகளில் இருந்தும் மரணமடைவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வாரத்தில் 800 இறப்புகள்
பிரித்தானிய மக்கள் மருத்துவமனையை நாடுவதில் சிக்கல் ஏற்பட்டால் அது வாரத்தில் 800 இறப்புகளுக்கு வரை காரணமாகலாம் என மருத்துவர் ஒருவர் அரசாங்கத்தை எச்சரித்துளாளார்.
இந்த நிலையில் பிரபல பத்திரிகை ஒன்று வெளியிட்ட தகவலில், ஆயிரக்கணக்கான நடுத்தர வயது பிரித்தானியர்கள் எளிதில் குணப்படுத்தக்கூடிய இதய நோய்களால் இறக்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளது.
@thesun
கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் மருத்துவமனைகளை நாட மக்கள் அச்சப்பட்டதாகவும், இதனால் முக்கியமாக கொழுப்பை கட்டுப்படுத்தும் அல்லது இரத்த அழுத்த மாத்திரைகளை மக்கள் பெற முடியாமல் போனது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, தங்களுக்கும் கொரோனா தொற்றிவிடுமோ என்ற அச்சமும் ஒரு காரணம் என கூறுகின்றனர்.
மேலும், 50 முதல் 64 வயதுடைய 5,170 ஆண்களின் இறப்பை உரிய நேரத்தில் இதய நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் தவிர்த்திருக்கலாம் எனவும் மருத்துவ ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
7.1 மில்லியன் நோயாளிகள்
மட்டுமின்றி, கொரோனா காலகட்டத்தில் சிகிச்சை தள்ளிவைக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 7.1 மில்லியன் என கூறுகின்றனர்.
இதில் பெரும்பாலானோர் 50 முதல் 64 வயதுடைய இதய நோயாளிகள் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் பொருட்டு 2025க்குள் 160 பரிசோதனை மையங்களை திறக்கவும் அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.
இதுவரை 90 மையங்களை திறந்துள்ளதாகவும், அதில் புற்றுநோய், இதயம் தொடர்பாகவும் நுரையீரல் சம்பந்தமாகவும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.