நாமக்கல் அருகே வீட்டில் பட்டாசுகள் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே மேட்டுத் தெரு பகுதியில் இன்று அதிகாலையில் அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறிய விபத்தில் தில்லைக்குமார் ( 35), பிரியா (28),செல்வி ( 55) மற்றும் பெரியக்காள் (73) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
பட்டாசு விபத்தில் 4 பேர் உயிரிழந்த துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவ்விபத்தில் காயமுற்றவர்களுக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் கூறியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடுவதாக கூறியுள்ளார். மேலும் விபத்தில் காயமுற்றவர்களுக்கு தலா ஐம்பதாயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
newstm.in