மத்திய மாகாணத்திற்குட்பட்ட தலகிரியாகம தென்னகோன்புர பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்த சிலர், தலையை வெட்டி எடுத்துச் சென்றதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பொது மயானத்திற்கு அருகில் நடந்து சென்ற ஒருவர் இதனை பார்த்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைக் கண்ட நபர் உயிரிழந்தவரின் மகளுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் உயிரிழந்தவரின் மகள் கலேவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது எமது குற்றப் பார்வை நிகழ்ச்சி,