தூத்துக்குடி புத்தாண்டை வரவேற்கும் விதமாக தூத்துக்குடி நகர வீதிகளில் அவதார் திரைப்பட கதாபாத்திரங்கள் மற்றும் டைனோசர் வடிவிலான பொம்மைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நடனமாடியபடி இளைஞர்கள் உற்சாக கொண்டாட்டம். 2023 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறக்க இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் தூத்துக்குடியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட காவல் துறை விதித்துள்ளது.
நள்ளிரவு 12 மணிக்கு மேல் கூட்டமாக சாலைகளில் யாரும் கூட கூடாது எவ்வித புத்தாண்டு குதுகல நடனம் மற்றும் கேளிக்கை ஆகியவற்றிற்கு அனுமதி கிடையாது என அறிவித்துள்ளது. மேலும் இளைஞர்கள் பைக் ரேஸ் மற்றும் பைக் வீல்ங்குகளில் ஈடுபட்டால் கைது செய்யப்பட்டு அவர்களது இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்படும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தூத்துக்குடியில் மாதா கோவில் பகுதி ஜார்ஜ் ரோடு காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக அவதார் திரைப்பட கதாபாத்திர உருவங்கள் மற்றும் டயனோசர் பொம்மை வடிவிலான உருவம் ஆகியவற்றை மின் விளக்குகளாள் அலங்கரித்து ஊர்வலமாக நடனமாடியபடி உற்சாகமாக எடுத்துச் சென்றனர் ஏராளமான பொதுமக்கள் இதை கண்டுகளித்தனர் தூத்துக்குடியில் புத்தாண்டை கொண்டாட அனைத்து தரப்பு மக்களும் தயாராகி வருகின்றனர்