600 ஆண்டுகளில் முதல் முறையாக.. பதவியை துறந்த ஜேர்மனியின் போப் ஆண்டவர் மறைவு


ஜேர்மனியைச் சேர்ந்த முன்னாள் போப் ஆண்டவர் 16ஆம் பெனடிக் தனது 95வது வயதில் காலமானார்.


16ஆம் பெனடிக்

கடந்த 2005ஆம் ஆண்டு போப் ஆண்டவராக பதவி ஏற்றவர் ஜோசப் அலோசியஸ் ரட்சிங்கர். தனது இயற்பெயரை 16ஆம் பெனடிக் என மாற்றிக்கொண்டார்.

2013ஆம் ஆண்டுவரை பதவியில் இருந்த பெனடிக், வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் தனது பதவியை துறந்தார்.

போப் ஆண்டவர் பதவியை யாரும் தாமாக முன் வந்து துறந்ததில்லை.

16ஆம் பெனடிக்/Pope Benedict XVI

@giulio napolitano / Shutterstock

ஆனால், கடந்த 600 ஆண்டுகளில் முதல் முறையாக பதவியை துறந்த போப் ஆண்டவர் பெனடிக் தான்.

95 வயதில் மறைவு

இந்த நிலையில் முன்னாள் போப் ஆண்டவரான 16ஆம் பெனடிக் உடல்நலக்குறைவு காரணமாக, தனது 95வது வயதில் காலமானதாக வாட்டிகன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

16ஆம் பெனடிக்/Pope Benedict XVI

@L’Osservatore Romano / AP file

முன்னதாக, அவர் உடல்நலம் பாதித்தபோது தற்போதைய போப் பிரான்சிஸ் அவரை நேரில் சந்தித்தார்.

16ஆம் பெனடிக் பதவியில் இருந்தபோது பல சர்ச்சைகளில் சிக்கி, அதற்காக மன்னிப்பும் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.    

16ஆம் பெனடிக்/Pope Benedict XVI

@Jens Meyer/AP



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.