பிறந்தது ஆங்கில புத்தாண்டு – மக்கள் உற்சாக வரவேற்பு

ஆங்கில புத்தாண்டு 2023 நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறி மகிழ்ந்தனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் புத்தாண்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. 

மேலும் இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலை மூடப்பட்டது. இதனால் சென்னை மெரினாவில் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நட்சத்திர ஹோட்டல்கள், மால்களில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதேபோல் கோயம்புத்தூர், மதுரை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

மேலும், 2023 புத்தாண்டு பிறந்ததையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அனைத்து கிறிஸ்தவ சபைகளிலும் இரவு 10 மணி முதல் புத்தாண்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் தங்களுக்குள் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.