“பா.ஜ.க.,வும், ஆர்எஸ்எஸ்சும் என்னை கடுமையாக விமர்க்கின்றன. இதுவே எனக்கு வழிகாட்டியாக இருப்பதுடன், என்னை மேலும் மேம்படுத்த உதவியாக இருக்கிறது,” என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி துவக்கிய பாரத் ஜோடோ யாத்திரையானது, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு
காரணமாக ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. நாளை மறுநாள் (ஜனவரி 2) யாத்திரை மீண்டும் துவங்க உள்ளது. பாத யாத்திரையின் போது, ராகுலுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டிருந்தது. இதற்கு மத்திய அரசு பதிலளித்தது. பாத யாத்திரையின் போது ராகுல் காந்தி பல இடங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக,பாதுகாப்பு படையினர் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது:
பாத யாத்திரையின் போது பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக தொடர்ச்சியாக பாதுகாப்பு படையினர் மீது கூற வைத்து எந்த காரணமும் இல்லாமல் என் மீது வழக்குப்பதிவு செய்ய பா.ஜ.க. அரசு முயற்சி செய்கிறது. கொரோனாவை காரணம் காட்டி யாத்திரையை நிறுத்த முயற்சி செய்கிறது. புல்லட் புரூப் வாகனத்தில் செல்லும்படி உள்துறை அமைச்சகம் கூறுகிறது. அதனை நான் எப்படி செய்ய முடியும்?
யாத்திரையின் போது நான் நடந்து தான் செல்ல முடியும். பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும் என அவர்களுக்கு தெரியும். ஆனால், இதனை பிரச்னை ஆக்குகிறார்கள். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரையை துவக்கிய போது, சாதாரணமாக தான். ஆனால், மெதுவாக, இந்த யாத்திரையின் குரல் மற்றும் உணர்வுகளை புரிந்து கொண்டேன். இந்த யாத்திரை மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு ஆகியவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
புதிய வகையில் சிந்திக்க நாட்டிற்கு புதிய பாதை உருவாகி உள்ளது. பா.ஜ.க.,விடம் ஏராளமான பணம் உள்ளது. ஆனால், உண்மையுடன் அக்கட்சியால் போட்டியிட முடியாது. எங்கள் மீது பா.ஜ.க., – ஆர்எஸ்எஸ் அமைப்பினர் செய்யும் விமர்சனத்தை நான் வரவேற்கிறேன். அதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். அது தான் எங்களை வலிமையாக்கிறது. ஒரு வகையில் அது எங்களுக்கு உதவியது. பா.ஜ.க., இன்னும் எங்களை ஆவேசமாக விமர்சிக்க வேண்டும். பா.ஜ.க.,வை எனது குருவாக நினைக்கிறேன். எங்களுக்கான வழியை அவர்கள் காட்டுவதுடன், எதை செய்ய க்கூடாது என அவர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.
பாரத் ஜோடோ யாத்திரையின் கதவுகள் அனைவருக்காகவும் திறந்துள்ளன. எங்களுடன் இணையும் யாரையும் நாங்கள் தடுக்க மாட்டோம். அகிலேஷ், மாயாவதி உள்ளிட்டவர்கள் ‘அன்பின் இந்தியா’வை விரும்புகின்றனர். கொள்கை ரீதியாக எங்களுடன் அவர்களுக்கு உறவு உள்ளது. நான் அணியும் டீ சர்ட் காரணமாக ஏன் அதிகளவு இடையூறு செய்யப்படுகிறது.
குளிர்காலம் கண்டு பயம் இல்லாததால், நான் ஸ்வெட்டர் அணிவது கிடையாது. குளிரை உணரும் போது ஸ்வெட்டர் அணிவேன். பொது கொள்கையுடன் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்தால், பாஜ.க., தேர்தலில் வெற்றி பெறுவது கடினமாகிவிடும். ஆனால், எதிர்க்கட்சிகள் முறையாக இணைய வேண்டும். மாற்று கொள்கைகளுடன் மக்களை எதிர்க்கட்சிகள் அணுக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.