உலகம் முழுவதும் வீசும் பொருளாதார சூறாவளி, சமூக மற்றும் அரசியல் புயலின் மத்தியில் வரவிருக்கும் புதிய வருடம் நம் அனைருக்கும் சவால் மிக்க ஒன்றாக அமையவுள்ளது.
இவை அனைத்துக்கும் மத்தியில் சிறிய தீவின் குடிமக்களாகிய நாம் உறுதியாகவும், சுயாதீனமாக எழுந்து நிற்பதற்கு காணப்படும் வாய்ப்புக்கள் குறைவாகும். இருந்தபோதும் இது செய்ய முடியாதது அல்ல.
எமது நாட்டின் சுதந்திரத்தின் பவள விழா கொண்டாடப்படும் 2023ஆம் வருடத்தின் ஆரம்பத்தில், இதேபோன்று கவனமாக, பொறுப்புடனும், கௌரவமாகவும் எவ்வாறு இருப்பது என்ற நோக்கத்துடனேயே சிந்திக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன். 2023ஆம் ஆண்டை எதிர்நோக்கும் வேளையில், கடந்த 2022ஆம் ஆண்டு முன்னெப்போதும் இல்லாதபடி இலங்கை வரலாற்றில் மாற்றங்களுக்கு உட்பட்ட ஆண்டு என அடையாளப் படுத்துவதில் எவ்வித தவறும் இல்லை. அத்துடன், இந்த அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள், வரக்கூடிய நீண்டகால எதிர்காலத்துக்கு ஒரு பெரிய பாரம்பரியம் அன்றி பாதகமாகக் கருத முடியாது.
இதுவரை காலமும், இலங்கையர் என்ற ரீதியில் எமக்கிடையில் கட்டியெழுப்பியுள்ள கௌரவமான ஒற்றுமையை பிழவுபடச் செய்யக் கூடிய சமூக, அரசியல், பொருளாதார மற்றும் அடிப்படைவாத புயலில் இருந்து விடுபட்டு நாம் ஒன்றுமையாக இருக்க வேண்டும். இது அரசியல் வாதிகளுக்கு மாத்திரமன்றி நிகழ்கால மற்றும் எதிர்காலத்தைச் சேர்ந்த சகல இலங்கையர்களின் தோள்களிலும் சுமத்தப்பட்டுள்ள பாரிய பொறுப்பாகும்.
கடந்த காலத்தில் என்ன நடந்திருந்தாலும் எதிர்காலத்தில் நிச்சயமாக நாம் ஒருவருக்கு ஒருவர் கௌரவமாக நடந்துகொள்ள வேண்டும். நாம் எந்தத் தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் இதற்கு எதிரான தரப்பினரை எதிரிகளாகப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இரு தரப்பினருக்கும் இடையில் பொதுவான, மத்தியஸ்தமான இணக்கப்பாட்டை ஏற்படுத்த கௌரவம் மிகவும் முக்கியமான காரணியாகும்.
அத்துடன், பெரியவர்கள் என்ற ரீதியில் நாம் கடந்த ஆண்டை விட எதிர்வரும் புதிய வருடத்தில் எதிர்கால சந்ததியினர் தொடர்பில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். போட்டி நிறைந்த உலகில், ஓட்டப் பந்தயத்தில் ஓடும் எமது பிள்ளைகளை நாம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்போம். எமது நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்கவிருக்கும் பிள்ளைகள் தொடர்பில் குடும்பங்கள், பாடசாலைகளில் மாத்திரமன்றி, கோவில்கள், பள்ளிகள் மற்றும் சுற்றத்தவர்களுக்கும் அவர்களைக் கண்காணிக்க வேண்டிய தலையாய பொறுப்பு உள்ளது.
நமக்கு உன்னதமான ஒரு சுதந்திரத்தைக் கொண்டாட, நாம் தேசிய சுதந்திரத்தின் ‘பரலோக இராஜ்ஜியத்தில்’ அடியெடுத்து வைக்க வேண்டும் என்று கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் தனது புகழ்பெற்ற புத்தகமான ‘கீதாஞ்சலி’யின் முப்பத்தைந்தாவது வசனத்தில் கூறுகிறார். அந்த பரலோக இராஜ்ஜியத்தில், நம் மனப் பயம் இல்லாமல் தலைநிமிர்ந்து நிற்கும், எங்கு அறிவுச் சுதந்திரம் நிற்கிறதோ, உண்மையின் ஆழத்திலிருந்து வார்த்தைகள் வெளிவர வேண்டும். அயராத முயற்சி பூரணத்தை நோக்கி தன் கரங்களை நீட்டும். எப்போதும் விரிவடையும் எண்ணத்திலும் செயலிலும் மனம் உன்னால் முன்னோக்கி கொண்டு செல்லப்படுகிறது அத்தகைய சுதந்திர நிலையை நோக்கி ஒரு நாடு செல்ல வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.
2023 உங்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் ஆரோக்கியம் நிறைந்த புத்தாண்டாக அமையட்டும்!
மஹிந்த யாப்பா அபேவர்தன,
சபாநாயகர்,
இலங்கைப் பாராளுமன்றம்.