ரேஷ்மாவுக்கு அதிர்ச்சி தந்த அந்த வீடியோ
எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன். இந்த படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ரேஷ்மா. தொடர்ந்து சில படங்களில் நடித்தார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனிலும் பங்கேற்றார். தற்போது சீரியலில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஜீ தமிழ் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரேஷ்மா தனக்கு நேர்ந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தை பகிர்ந்துள்ளார் . அது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில், நான் அமெரிக்காவில் இருந்தபோது எனது சகோதரி என்னுடைய அந்தரங்க வீடியோவை பார்த்ததாக ஒரு அதிர்ச்சி தகவல் கொடுத்தார். அந்த வீடியோவை எனக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அதில் இருப்பது நான் இல்லை. யாரோ மார்பிங் செய்து அதை வெளியிட்டுள்ளார்கள் என்பதை புரிந்து கொண்டேன். இதையடுத்து எனது குடும்பத்தாருக்கு அந்த உண்மையை புரிய வைத்தேன். என்னை போன்று திரை உலகை சாராத ஒரு பெண்ணுக்கு இப்படி ஒரு கொடுமை நேர்ந்து இருந்தால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பார். சிலர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் இதன் உண்மைத்தன்மையை புரிந்து கொண்டு என்னை தேற்றியதால், நான் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வந்து விட்டேன் என்று தெறிவித்துள்ளார் நடிகை ரேஷ்மா.