அரவக்குறிச்சி: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா தாதங்கோட்டையை சேர்ந்தவர் விஜயகுமார்(34). கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலைய போலீஸ்காரர். நேற்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா பாதுகாப்பு பணிக்கு பைக்கில் சென்றார்.
கரடிப்பட்டி பிரிவு என்ற இடத்தில் எதிரில் கேரளாவுக்கு சிமென்ட் லோடு ஏற்றி சென்ற லாரி, பைக் மீது மோதியதில் விஜயகுமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் பலியான விஜயகுமாருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.