லண்டன்-இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அலோக் சர்மா உட்பட 30 பேர், ‘நைட்’ எனப்படும் பிரிட்டன் மன்னரின் கவுரவ விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், சிறந்த சேவையாற்றுவோருக்கு, அரச குடும்பத்தின் சார்பில் ‘நைட் ‘ எனப்படும் உயரிய கவுரவ விருது வழங்கப்படுகிறது.
நேற்று, 2023ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விருது, பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்ற பின் முதல் முறையாக வழங்கப்படுகிறது.
இந்தப் பட்டியலில், 1,107 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில், 50சதவீதம் பேர் பெண்கள். பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 30பேர் இடம்பெற்றுள்ளனர்.
பொருளாதாரம், கல்வி, மருத்துவம், பொது சேவை என பல்வேறு பிரிவுகளில் சிறந்த சேவையாற்றியோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
கடந்த அக்., வரை, பிரிட்டன் அமைச்சராக இருந்த அலோக் சர்மா இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
பருவநிலை மாறுபாடு பிரச்னையில் மிகச் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
பொருளாதாரம் மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் பிரிவில், கேம்பிரிட்ஜ் பல்கலை பேராசிரியர் சர் பார்த்தசாரதி தாஸ்குப்தா தேர்வாகியுள்ளார்.
தொழிலதிபரான இவான் மேனுவல் மெனசஸ், மருத்துவப் பேராசிரியர் டாக்டர் மயூர் கேசவ்ஜி லக்கானி உள்ளிட்டோரும் இந்த விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்