நியூயார்க்: பாலஸ்தீன நிலப் பகுதியை இஸ்ரேல் நீண்ட காலமாக ஆக்கிரமித்திருப்பது மற்றும் இணைத்திருப்பதன் சட்டரீதியான விளைவுகள் குறித்து சர்வதேச நீதிமன்றத்தின் கருத்தை கோரும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் கொண்டு வரப்பட்டது.
கிழக்கு ஜெருசலேம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ் தீனப் பகுதியில் உள்ள பாலஸ்தீனர்களின் உரிமைகளைப் பாதிக்கும் இஸ்ரேலிய நடைமுறை கள் குறித்த இந்த வரைவுத் தீர்மானம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 87 நாடுகள் வாக்களித்தன. இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட 26 இதற்கு எதிராக வாக்களித்தன.
இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 53 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. பாலஸ்தீன பகுதியை கடந்த 1967 முதல் இஸ்ரேல் ஆக்கிர மித்துள்ளது. ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன் பேசுகையில், “சொந்த நாட்டில் வசிக்கும் யூத மக்களை ஆக்கிர மிப்பாளர்கள் என்று எந்தவொரு சர்வதேச அமைப்பும் முடிவு செய்ய முடியாது” என்றார்.