2022-ல் ரூ.11.40 கோடி மதிப்பிலான கடத்தல் ரேசன் பொருட்கள் பறிமுதல் – உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு எஸ்.பி தகவல்

மதுரை: கடந்தாண்டு (2022) ரூ. 11.40 கோடி மதிப்புள்ள கடத்தல் ரேசன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை எஸ்பி தெரிவித்தார்.

உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளர் சிநேகப் பிரியா தலைமையில் ரேசன் பொருட்கள் கடத்தல் பதுக்கலை தடுக்க மதுரை உட்பட 10 மாவட்ட குற்றப்புலனாய்வுத்துறை காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதன் மூலம் கடந்தாண்டு 2,113 நபர்கள் மீது 1981 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் 19 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் ரூ.11,40,31,836 மதிப்புள்ள 1405 டன் ரேசன் அரிசி, 2676 லிட்டர் மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு , பாமாயில் மற்றும் இதர கடத்தல் ரேசன் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய 695 வாகனங்களும் கைப்பற்றப்பட்டு பொது ஏலத்திற்கு விடப்பட்டுள்ளன. 2023ம் ஆண்டிலும் இதுபோன்ற நடவடிக்கை தொடரும் என எஸ்பி சிநேகப்பிரியா தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.