ஜெய்ப்பூர்: மும்பை, பாந்த்ரா டெர்மினசில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு சூர்யநகரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்றது. பாலி மாவட்டம், ராஜ்கியாவாஸ்-பாமோதாரா இடையே ரயிலின் 13 பெட்டிகள் திடீரென தடம்புரண்டது. அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் துாங்கி கொண்டிருந்தனர். பெட்டிகள் தடம்புரண்டதால் அவர்கள் பீதியில் உறைந்தனர்.
வடமேற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,‘‘பாலி அருகே அதிகாலை 3.27 மணிக்கு ரயில் தடம்புரண்டது. இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.26 பேர் படுகாயமடைந்தனர். ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூத்த அதிகாரிகள் நிலைமையை கண்காணிக்கின்றனர்’’ என்றனர்.