புதுடில்லி: டில்லியில் விபத்தில் காரில் சிக்கி பல கி.மீ. தூரம் இழுத்து செல்லப்பட்டு இளம் பெண் உயிரிழந்த சம்பவத்தில், விசாரணை வேகம் எடுத்துள்ளது.
புதுடில்லியில், இங்குள்ள புறநகர் பகுதியான சுல்தான்புரி என்ற இடத்தில், அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற 20 வயது இளம் பெண் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த காரில் ஐந்து பேர் இருந்தனர். கார் சக்கரத்தில் பெண்ணின் உடல் சிக்கிக் கொண்டது. ஆனால் காரை நிறுத்தாமல் அவர்கள் அதை ஓட்டி சென்றனர்.
சக்கரத்தில் சிக்கிய பெண்ணின் ஆடைகள் கிழிந்து, உடல் உறுப்புகள் நசுங்கி உயிரிழந்த நிலையில் காஞ்ஹாவாலா என்ற இடம் வரையில் 12 கி.மீ., துாரம் அவரது உடல், சாலையில் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டது.
இந்த காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகி பலரை அதிர்ச்சி அடைய செய்தது. காரில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர முறையில் கொல்லப்பட்டரா என்ற கோணத்திலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து டில்லி உயர் அதிகாரி நியமித்து விசாரணை நடத்தி உடனே அறிக்கை தர மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார்.
இதையடுத்து விசாரணை அதிகாரி ஷாலினிசிங் நேற்று இரவோடு இரவாக சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவிட்டார். அவருடன் டில்லி போலீசார் விசாரணை நடத்தினர்.
எனவே விசாரணை வேகமெடுத்துள்ளதால், இந்த கொடூர கொலை சம்பவத்தில் நடந்த உண்மைகள் வெட்ட வெளிச்சமாகும் என நம்பப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement