இந்துார், மத்திய பிரதேசத்தில் சாலையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, 22 வயது கல்லுாரி மாணவரை, ஆறு சிறுவர்கள் துரத்திச் சென்று கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
மத்திய பிரதேசத்தின் இந்துாரில் உள்ள பான்வார்குவான் என்ற பகுதியில், கடந்த மாதம் 31ம் தேதி மாலை, ஆறு சிறுவர்கள் சாலையில் வழிமறித்தபடி நின்று கொண்டிருந்தனர்.
அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள், ‘ஹாரன்’ அடித்து சிறுவர்களை வழிவிட்டு நிற்கும்படி கூறினர். இதனால் வாய் தகராறு ஏற்பட்டது.
சண்டை முற்றியதை அடுத்து, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் அந்த இடத்தை விட்டு புறப்பட்டனர். அவர்களை ஆறு சிறுவர்கள் துரத்திச் சென்றனர்.
அதில், ஒரு சிறுவன் தன் கையில் வைத்திருந்த கத்தியால், இரு சக்கர வாகனத்தின் கடைசியில் அமர்ந்திருந்த ஆயுஷ், 22, என்ற கல்லுாரி மாணவரை கத்தியால் குத்தினான்.
இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆயுஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொலைக்கு காரணமான ஆறு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் இருவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement